முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து வந்த பெண்கள்.
மதுரை அவனியாபுரம் அருகே வெள்ளக்கலில் பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.;
மதுரை அவனியாபுரத்தை அடுத்துள்ள வெள்ளக்கல் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மந்தையம்மன் கோவில் புரட்டாசி பொங்கலை முன்னிட்டு இன்று (அக்.8) மாலை சுமார் 540 பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து கோவில் வளாகத்தில் இருந்து வந்து கலுங்கடி முனியாண்டி கோவில் முன்பு உள்ள கண்மாயில் கரைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை வெள்ளக்கல் கிராமத்தினர் செய்திருந்தனர்.