மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு

மதுரை சோழவந்தான் அருகே குடிநீர் மேல்நிலை தொட்டியில் மலம் கலந்திருப்பதாக புகார் அளித்துள்ளது;

Update: 2025-10-09 03:44 GMT
மதுரை சோழவந்தான் அருகே உள்ள கருப்பட்டி ஊராட்சி அமச்சியாபுரம் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு சொந்தமாக ஊரின் முன்பாக மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி உள்ளது அதில் மர்ம நபர்கள் சிலர் மலம் கழித்துள்ளனர். இது சம்பந்தமாக வீடியோ பதிவும் தற்போது வெளியாகி உள்ளது இதுகுறித்து கிராம மக்கள் ஊராட்சி செயலாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News