கரூர் துயர சம்பவத்தில் முன்னாள் காவல்துறை அதிகாரி மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு.
கரூர் துயர சம்பவத்தில் முன்னாள் காவல்துறை அதிகாரி மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு.;
கரூர் துயர சம்பவத்தில் முன்னாள் காவல்துறை அதிகாரி மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு. கடந்த 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சோக சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலும், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்கில் நீதிமன்றம் தமிழக வெற்றிக்கழக தலைமைக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தது தொடர்பாக அதனை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்ட மூவர் மீது காவல்துறையினர் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த கார்த்திக் என்பவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து தவறான மற்றும் அவதூறு கேலி செய்யும் விதத்தில் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பார்த்ததை வைத்து அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் அரசியல் விமர்சகரும் முன்னாள் காவல்துறை அதிகாரியுமான வரதராஜன் மீது அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.