காங்கேயம் அருகே பைக்கில் நிலை தடுமாறி கீழே விழுந்த விவசாயி பலி - வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சாலையை கடக்க இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணால், எதிர் திசையில் அதிவேகத்தில் வாகனத்தில் வந்து கொண்டிருந்த விவசாயி சின்னசாமி நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் மருத்துவமனையில் கொண்டு சென்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த சோகம்.;
காங்கேயம் அடுத்துள்ள மறவபாளையம் ஊராட்சி மாரம்பள்ளதோட்டதில் சின்னசாமி(60), மனைவி கோவிந்தம்மாள் (55) வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீதேவி என்ற ஒரே மகள் உள்ளார் அவரும் திருமணமாகி கணவனுடன் தனியாக வசித்து வருகிறார். சின்னசாமி விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில் சாவடியில் இருந்து மறவபாளையம் செல்லும் சாலையில் இவருக்கு சொந்தமான எலக்ட்ரிக் பைக்கில் அதிவேகத்தில் வந்துள்ளார் அப்போது சிறிய வளைவு பகுதியில் வரும்போது ஒரு புறம் சைக்கிள் நிறுத்தப்பட்டுள்ளது மறுபுறம் சாலையை கடக்க இருசக்கர வாகனத்தில் ஒரு பெண் வருகின்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சின்னசாமி எலக்ட்ரிக் பைக் பிரேக்கை பிடிக்கின்றார். இதில் அவருடைய வாகனம் வளைந்து நெளிந்து கீழே விழுகிறார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் கூச்சலிடவே அருகே இருந்தவர்கள் உதவியுடன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சென்னிமலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை வழங்குகின்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் கொண்டு செல்கின்றனர் ஆனால் வரும் வழியிலேயே உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து சடலத்தை காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனை சவக்கிடங்கில் பிரேத பரிசோதனைக்கு வைத்துள்ளனர். விபத்து குறித்து காங்கேயம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.