போலீஸ் ரோந்து ஜீப்பை சேதப்படுத்திய இருவர் கைது

கைது;

Update: 2025-10-09 07:14 GMT
வீரபாண்டி - தேனி பைபாஸ் சாலையில் நேற்று முன்தினம் இரவு தேசிய நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் ஜீப்பில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் ஆண்டவர், சிவா ஆகியோர் வாகனத்தை நிறுத்தி மது குடிக்க முயற்சித்தனர். போலீசார் இவர்களை விசாரித்த போது இருவரும் போலீசாரை திட்டி, ரோந்து ஜீப்பின் வலதுபுற கண்ணாடியை கைகளால் உடைத்து கொலை மிரட்டல் விடுத்தனர் . வீரபாண்டி காவல்துறையினர் இருவரையும் கைது (அக்.8) செய்தனர்.

Similar News