வனத்துறை நடத்திய பேச்சு போட்டியில் பரிசு வென்ற மாணவி
தமிழ்நாடு வனத்துறை வார நாளை முன்னிட்டு நடந்த பேச்சு போட்டியில் பரிசு பெற்ற மாணவிக்கு பாராட்டுகள் குவிகின்றன;
தமிழ்நாடு வனத்துறை சார்பாக வன உயிரின வார நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் சேக்கிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பெ.துர்கா முதல் பரிசை வென்றார். மதுரை மாவட்ட வன அலுவலர்(IFS) ரேவிதி ராமன் அவர்கள் கேடயம்,சான்றிதழை வழங்கி பாராட்டினார். மாணவி மென்மேலும் வளர வாழ்த்துகளையும்,பாராட்டுக்களையும் பாரதிதாசன் அகாடமி சார்பாக தெரிவித்தனர்.