புள்ள கவுண்டம்பாளையத்தில் ஆடுகளை மேய்க்க சென்ற முதியவர் கிணற்றில் சடலமாக மீட்பு.

புள்ள கவுண்டம்பாளையத்தில் ஆடுகளை மேய்க்க சென்ற முதியவர் கிணற்றில் சடலமாக மீட்பு.;

Update: 2025-10-09 13:58 GMT
புள்ள கவுண்டம்பாளையத்தில் ஆடுகளை மேய்க்க சென்ற முதியவர் கிணற்றில் சடலமாக மீட்பு. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி வயது 83. புதன்கிழமை அன்று வழக்கம் போல அவரது தோட்டத்தில் அவருக்கு சொந்தமான ஆடுகளை மேய்க்க சென்றார். ஆடுகளை மேய்க்க சென்றவர் வழக்கம் போல வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த தண்டபாணி மனைவி வீராத்தாள் தோட்டத்திற்கு சென்று தனது கணவனை தேடி உள்ளார். அப்போது கிணற்றில் தனது கணவர் சடலமாக இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தவர் இது குறித்து சின்ன தாராபுரம் காவல்துறையினர்க்கு அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உயிரிழந்த தண்டபாணி உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சின்னதாராபுரம் காவல் துறையினர்.

Similar News