சங்கரன்கோவிலில் மின் பாதுகாப்பு: மாணவா்களுக்கு விழிப்புணா்வு

மின் பாதுகாப்பு: மாணவா்களுக்கு விழிப்புணா்வு;

Update: 2025-10-10 02:44 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மின் வாரியம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு மின் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளா் சந்திரசேகா், திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி ஆகியோரது உத்தரவின்பேரில், சங்கரன்கோவில் என்.ஜி.ஓ காலனியில் உள்ள ஸ்ரீ வையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு மின் பாதுகாப்பு வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

Similar News