தீபாவளி தினத்தில் மது கடைகளை மூட வேண்டும் - தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த இந்து மக்கள் கட்சி

கோரிக்கை;

Update: 2025-10-10 06:53 GMT
தீபாவளி பண்டிகை வருகிற 20-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது இதற்காக பொதுமக்கள், சிறுவர்கள் புத்தாடைகள், பட்டாசுகளை வாங்கி கொண்டாடுவதற்காக தயாராகி வருகின்றனர் இந்த நிலையில் தீபாவளி பண்டிகை தினத்தன்று தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழக அரசு வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர் தீபாவளி தினத்தன்று மது கடைகளை திறந்து வைப்பதால் இளைஞர்கள், மது பிரியர்கள் குடித்துவிட்டு வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், குடும்பங்களில் பிரச்சினைகள் ஏற்படும் நிலை இருப்பதாலும் தீபாவளி முதல் நாள் மற்றும் தீபாவளி தினத்தன்று தமிழகம் முழுவதும் உள்ள மது கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் தேனி மாவட்ட இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணைத்தலைவர் குரு ஐயப்பன் தலைமையில் இந்து மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்

Similar News