கடலில் தற்கொலைக்கு முயன்ற இளம் பெண் மீட்பு

குளச்சல்;

Update: 2025-10-10 12:17 GMT
குளச்சல் அருகே கொட்டில்பாடு கடற்கரையில் 22 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் நேற்று மாலையில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். இதனை கவனித்த பொதுமக்கள் அவர்  நடவடிக்கையை கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பெண் திடீரென கடலலை நோக்கி நடந்து சென்றார். அப்போது மீனவர்கள் விரைந்து சென்று இளம் பெண்ணை மீட்டு, அங்குள்ள ஒரு வீட்டின் வீட்டில் உட்கார வைத்தனர்.      பின்னர்  இதுகுறித்து குளச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மகளிர் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று அவரை காவல் நிலையம்  அழைத்து வந்து விசாரித்தனர்.  விசாரணையில் இளம்பெண் கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்த ஷைஜு என்பவரின் மனைவி ஷீபா (22) என்பது தெரிய வந்தது.  ஷீபா சென்னையைச் சேர்ந்தவர் என்பதும்,  திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த ஷைஜு சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.      தற்போது கல்லுக்கூட்டம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் இவர்களுக்குள் குடும்பத்தகராறு  காரணமாக மனம் உடைந்த ஷீபா தற்கொலை செய்து கொள்ள கடற்கரை சென்று தெரிய வந்தது. போலீசார் இளம் பெண்ணுக்கு அறிவுரை கூறி கணவர் வீட்டுக்கு கொண்டு சென்று விட்டனர்.

Similar News