மனோகரா கார்னரில் டூ வீலரில் சென்றவர்கள் மீது தனியார் பேருந்து மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
மனோகரா கார்னரில் டூ வீலரில் சென்றவர்கள் மீது தனியார் பேருந்து மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.;
மனோகரா கார்னரில் டூ வீலரில் சென்றவர்கள் மீது தனியார் பேருந்து மோதி விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுக்கா கோயம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முத்துவீரன் வயது 60. அருகிலுள்ள செல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி மனைவி காந்திமதி வயது 60, இவர்கள் இருவரும் வியாழக்கிழமை இரவு 7:20 மணியளவில் கரூர் - கோவை சாலையில் அவர்களது டூவீலரில் சென்றனர், இவர்களது வாகனம் மனோகரா கார்னர் அருகே சென்றபோது அதே சாலையில் கரூர் சின்ன வாய்க்கால் சந்து பகுதியைச் சேர்ந்த முருக பாண்டி வயது 35 என்பவர் வேகமாக ஓட்டி வந்த தனியார் பேருந்து முத்துவீரன் ஓட்டி சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்ததில் முத்துவீரன் மற்றும் காந்திமதி ஆகிய இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இருவரையும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக டூவீலரின் பின்னால் அமர்ந்து வந்த காந்திமதி அளித்த புகாரில் பேருந்தை கவனக்குறைவாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய முருக பாண்டி மீது கரூர் மாநகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.