குழித்துறை : தெரு நாய்களுக்கு  தடுப்பூசி

அதிகாரிகள் நடவடிக்கை;

Update: 2025-10-10 12:28 GMT
குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருக்களில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிகின்றன. இந்த நாய்களால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குட்பட்டு வந்தனர். இதை அடுத்து குழித்துறை நகராட்சி சார்பில் சாலைகளில் சுற்றி திரியும் நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று நடைபெற்றது. குழித்துறை கால்நடை பரபரப்பு துறை டாக்டர் எட்வின் தாமஸ், சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் 36 நாய்களுக்கு தடுப்பூசியிட்டனர்.

Similar News