தமிழ்நாடு அரசு நடத்தும் கலையால் கல்வி செய்வோம் என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை கல்லூரிக்களில் கலைத் திருவிழாக்கள் நடத்த அரசின் உயர் கல்வித் துறையால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் நாகர்கோவில் கோணம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 22.09.2025 அன்று தொடங்கிய கலைத் திருவிழா 10.10.25 நேற்று வரை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் கவிதைப் போட்டி முதல் கவனிக்க மறந்த காட்சிகள் என சுமார் 30 போட்டிகள் நடைபெற்றது. கலைத் திருவிழாவின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சுசீலாபாய் தலைமை தாங்கினார், கன்னியாகுமரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் சரோஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்,