அமச்சியாபுரத்தில் எம்எல்ஏ ஆய்வு

மதுரை சோழவந்தான் அருகே அமச்சியாபுரத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் தொடர்பாக வெங்கடேசன் எம் எல் ஏ ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2025-10-11 03:43 GMT
மதுரை சோழவந்தான் தொகுதி வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் கருப்பட்டி ஊராட்சி அமச்சியாபுரம் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று (அக்.10)இது குறித்து எம்எல்ஏ வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டார். பைப் லைன்கள் முழுவதையும் மாற்றி குழாய் இல்லாத வீடுகளுக்கு இணைப்பு வழங்க உத்தரவிட்டார். மேலும் எம்.எல்.ஏ., நிதியில் புதிதாக போர்வெல் அமைத்து குடிநீர் தொட்டிகள் அமைக்கவும், தெரு விளக்குகள் அமைக்கவும் ஏற்பாடுகளையும் செய்தார். உடன் பி.டி.ஓ., லட்சுமி காந்தம், மண்டல துணை பி.டி.ஓ., பூர்ணிமா இருந்தனர்.

Similar News