ஈட்டியால் குத்தி ஒருவர் கொலை.
மதுரை உசிலம்பட்டி அருகே ஈட்டியால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டார்;
மதுரை மாவட்டம் பேரையூர் கே.பாப்புநாயக்கன்பட்டி கருப்பசாமி மகன் தேசாமுத்து (27) இவரது சகோதரர் கருப்பசாமி. இவர்களது வீடு அருகருகே உள்ளது. நிலப்பிரச்னை தொடர்பாக நேற்று முன்தினம் (அக்.9) இரவு இருவரும் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு அருகில் இருந்த கருப்பன் என்பவரின் வீட்டின் கம்பி வேலி துாண் கற்களை உடைத்துள்ளனர். இதை கண்டு ஆத்திரம் அடைந்த கருப்பனின் தந்தை அழகர்சாமி( 68) வீட்டில் இருந்த ஈட்டியால் தேசாமுத்தை குத்திக் கொலை செய்தார். போலீசார் அழகர்சாமியை கைது செய்தனர்.