கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக் கூடத்தை விஜய் வசந்த் எம்.பி., இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு கொட்டாரம் பேரூராட்சி தலைவர் செல்வகனி தலைமை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு, அகஸ்தீஸ்வரம் வட்டார காங்கிரஸ் தலைவர் சாம் சுரேஷ்குமார், கொட்டாரம் பேரூர் காங்கிரஸ் தலைவர் எஸ்.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமுதாய நலக்கூட கட்டடத்தை விஜய் வசந்த் எம்.பி., திறந்து வைத்தார்.