நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் உள்ள
முறைகேடுகளை களைய வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்;
நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ரூ.600, ஓட்டுனர்களுக்குரூ.740 தினக்கூலியாக வழங்க வேண்டும். நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் உள்ள முறைகேடுகளை களைய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை நகராட்சி அலுவலகம் முன், சிஜடியூ நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு, சிஐடியூ மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.ராஜேந்திரன் தலைமை வகித்து, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.