பல்லடத்தில் கடைகளுக்குள் புகுந்த கிரைன்
பல்லடத்தில் கடைகளுக்குள் புகுந்த கிரைன் அதிர்ச்சி சிசிடிவி;
திருப்பூர் மாவட்டம் பல்லடம் திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலை பணப்பாளையம் பகுதியில் சாலையோரத்தில் இருந்த வாடகை பாத்திர கடை மற்றும் வாகனம் பழுது பார்ப்போர் ஒர்க்ஷாப்புகளுக்குள் அவிநாசி பாளையத்திலிருந்து பல்லடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாய்லர் அமைப்பதற்காக சென்று கொண்டிருந்த கிரேன் தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த டிவைடருக்குள் திரும்ப முடியாமல் கடைகளுக்குள் புகுந்தது. இதனால் கடையில் இருந்த 10 க்கும் மேற்பட்டோர் அலறி அடித்து வெளியே ஓடி வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினர் . மேலும் மதுரையை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் வாகனத்தை இயக்கி வந்து இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளார் அதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து கிரேனை மீட்டனர் இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது