ஆண்டிபட்டி வட்டம், குமணன்தொழு பகுதியை சேர்ந்தவர் சாந்தி. இவரது வீட்டின் அருகே வசிப்பவர் கோபால். நேற்று முன் தினம் கோபால், சாந்தி வீட்டு வழியாக நடந்து சென்ற பொழுது அவரது வீட்டில் இருந்த நாய் கோபாலை பார்த்து குரைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கோபால் நாயை கொடூரமாக அடித்து கொலை செய்ததுடன் சாந்தியையும் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மயிலாடும்பாறை காவல்துறையினர் கோபாலை கைது (அக். 10) செய்தனர்.