பிலிக்கல்பாளையம் - கொடுமுடி காவிரி ஆற்றின் குறுக்கே உயர்நிலை பாலம் அமைக்கப்படும்.
பிலிக்கல்பாளையம் கொடுமுடி காவிரி ஆற்றின் குறுக்கே உயர்நிலை பாலம் அமைக்கப்படும் என எடப்பாடி கே.பழனிசாமிபேச்சு.;
பரமத்தி வேலூர், அக் 10: பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலத்தில் அதிமுக சார்பில் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப் பயணக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை தள்ளுபடி செய்தோம் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணிநேரமும் கொடுத்தோம் மேலும் குடிமராமத்துத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இப்பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று ரூ.154 கோடியில் ராஜவாய்க்கால் கரைகளை கான் கிரீட் மூலம் பலப்படுத்தினோம்: நஞ்சை புகழூரில் தடுப்பணை ரூ. 400 கோடியில் கதவணையுடன் கட்டினோம் பரமத்தி வேலூரில் புகழூர் தடுப்பணை அமைத்தோம் ராஜ வாய்க்கால் அமைத்து தந்த அல்லான இளைய நாயக்கருக்கு மணிமண்டம் திருவுருவச்சிலை அமைத்தோம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை ரூ.15 கோடியில் கட்டினோம் சார்பதிவார் அலுவலகம்,துணை மின் நிலையம் அமைத்தோம் இப்பகுதியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வெற்றிலை ஆராய்ச்சி நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்தோம். ஆனால், திமுக ஆட்சியில் அதை கிடப்பில் போட்டனர். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் வெற்றிலை ஆராய்ச்சி நிலையம், பிலிக்கல்பாளையம் கொடுமுடி இடையே காவிரி ஆற்றின் குறுக்கே உயர்நிலை பாலம் ஆகியவை அமைக்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் ஏழை மக்களுக்கு உயர்தா சிகிச்சை கிடைக்க அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ.350 கோடியில் அமைத்தோம். மேலும் சட்டக்கல்லூரி, கலைக்கல்லூரி ஆகியவற்றை திறந்தோம். கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெற தமிழ்நாடு முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக்குகளை தொடங்கினோம். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் 4,000 அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்படும். நிறுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும். கிட்னி முறைகேட்டில் ஈடுபட்ட எம்எல்ஏ மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கரூரில் அசம்பாவிதம் நடந்து 41 உயிர்கள் பறிபோயின. அதிமுக ஆட்சி அமைந்ததும் அதுகுறித்து விசாரிக்கப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலில் வெற்றிபெறவே கூட்டணி வைக்கிறோம். தேர்தலில் இந்தக் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்றார். இதில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி, பரமத்தி வேலூர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப் பினர் எஸ்.சேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.