நாமக்கல் மாவட்ட அம்மா பேரவை சார்பில் அதிமுக ஆட்சியின் சாதனைகள் திமுக ஆட்சியின் அவலங்களை விளக்கும் வகையில் தெருமுனைப் பிரச்சாரம் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார்.

திருச்செங்கோடு பகுதிகளில் அதிமுகவின் பத்தாண்டு கால சாதனைகளை குறித்தும் திமுக அரசின் நான்கரை ஆண்டு கால மக்கள் விரோதப் போக்கு சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட வகைகளை பொதுமக்களிடையே எடுத்துக்கூறும் தெருமுனைப் பிரச்சாரம் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடைபெற்றது.;

Update: 2025-10-11 14:01 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வாலரை கேட் பகுதியில் மாவட்ட அதிமுக அம்மா பேரவை  சார்பில்  சி ஹெச் பி காலனி மற்றும் வாலரை கேட் பகுதிகளில் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறுவதும் நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியின் அவலங்கள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறும் விதமாக தெருமுனைப் பிரச்சாரம் நாமக்கல் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது திருச்செங்கோடு நகர செயலாளர் அங்கமுத்து முன்னிலை வகித்தார் இதில் சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும்  அதிமுக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தங்கமணி மற்றும் முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு  வணிக வளாகங்கள் மற்றும் வீடு வீடாக சென்று  துண்டறிக்கைகளை வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டார். வாலரை கேட் பகுதியில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் சரோஜா ஆகியோர் அதிமுக அரசின் பத்தாண்டு கால சாதனைகளை பொதுமக்களிடையே எடுத்துக் கூறினர் தொடர்ந்து நான்கரை ஆண்டு கால திமுக அரசின் அவல நிலைகளையும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு தினம் தோறும் கொலைகள் கொள்ளை கஞ்சா விற்பனை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஆகியவற்றை எடுத்துக் கூறி தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் அவற்றையெல்லாம் சரி செய்ய மீண்டும் தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆட்சியில் அமர வேண்டும் பொதுமக்கள் அதை உணர்ந்து மக்கள் செயல்பட வேண்டுமென வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்  நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சரோஜா, பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர், திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி, மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் பரணிதரன், பட்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் தெற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளருமான சத்தியமூர்த்தி, மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் சரவணராஜ், மாவட்ட விவசாய அணி தலைவர் உதயகுமார், மாவட்ட விவசாய அணி செயலாளர் மணக்காட்டார் (எ)  சின்னுசாமி உள்ளிட்ட சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News