கடையநல்லூரில் பலத்த மழை: வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது

பலத்த மழை: வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது;

Update: 2025-10-13 01:31 GMT
தென்காசி மாவட்டம் கடையநல்லூா், அதன்சுற்றுவட்டாரப் பகுதியில் மாலை இடியுடன் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக சாலைகளிலும், தெருக்களிலும் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. கலந்தா் மஸ்தான் தெருவில் சில வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. இதனால், மக்கள் பாதிப்படைந்தனா். சொக்கம்பட்டி, இடைகால், நயினாரகரம், கொடிக்குறிச்சி, அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

Similar News