பாக்குடி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் விளாபட்டி, மாங்குடி மற்றும் இலுப்பூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் ஆலத்தூர், பேயால், கிளிக்குடி, எண்ணெய் வெட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை (அக்.14) மின் நிறுத்தம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது என்று இலுப்பூர் உதவி செயற்பொறியாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.