மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.;
மதுரை புதூர் பகுதியில் உள்ள தாமரைத் தொட்டி எதிரே உள்ள மாற்றுத்திறனாளிகள் பூங்காவில் பாராசிட்டியின் வாலிபால் அசோசியேசன் சார்பாக சமத்துவ தீபாவளி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (அக்.13) கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தலைவர் சரவணகுமார் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார். செயலாளர் ஈஸ்வரன் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி அவர்கள் மற்றும் ஜி கிராண்ட் ஹோட்டல் உரிமையாளர் ரொட்டேரியன் டாக்டர் தினேஷ்குமார் ஆகியோர் இணைந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர்கள். உடன் சமூக ஆர்வலர்கள் வசந்தி, அர்சத் முபின், ஆசிரியர் பிரபு மற்றும் பாரா வாலிபால் அசோசியேசன் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.