பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலை வீட்டுமனை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்:அறிவிப்பு

பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலை வீட்டுமனை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்: ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு;

Update: 2025-10-13 06:47 GMT
தூத்துக்குடி பிரஸ் கிளப் செயற்குழு கூட்டம் தலைவர் சண்முகசுந்தரம் தாங்கினார். இதில் சங்க செயலாளர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார.. தொடர்ந்து பத்திரிக்கை மற்றும் செய்தியாளர்களுக்கு அரசு சார்பில் சலுகை விலை வீட்டுமனை இடங்கள் பல்வேறு மாவட்டங்களில் பத்திரிக்கையாளர்களுக்கு நான்கு கட்டங்களாக வழங்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசின் சலுகை விலை வீட்டுமனை அரசு வழங்குவதில் ஏற்பட்டுள்ள கால தாமதம் குறித்தும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் நிர்வாகிகள் எடுத்துரைத்தனர். பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு இது குறித்து அக்டோபர் 23ம் தேதி காலை 10 மணி அளவில் தமிழக முதல்வர் மற்றும் மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகம் முன்பு நடத்த அனுமதி கடிதம் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கடிதம் கொடுக்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Similar News