வல்லநாடு பகுதியில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி மக்கள் போராட்டம் - கடையடைப்பு!

வல்லநாட்டில் இளைஞர்கள் மீது போலீசார் பொய்வழக்கு போடுவதாக புகார் தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டு, கடையடைப்பு போராட்டம் நடந்தது.;

Update: 2025-10-13 06:59 GMT
நெல்லை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள வல்லநாட்டில் புறக்காவல் நிலையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் அங்கிருந்த பொருட்கள், கண்காணிப்பு கேமராக்களை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தி சென்றனர். இதில் அந்த புறக்காவல் நிலையம் முற்றிலும் சேதமடைந்தது. தொடர்ந்த ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த 2 போலீசாரை மர்மநபர்கள் தாக்கினர்.  இந்த சம்பவங்களை தொடர்ந்து முறப்பநாடு போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக சிலர் மீது போலீசார்  வழக்கு போட்டுள்ளதாகவும், மேலும் சிலரிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.  இந்த நிலையில் வல்லநாட்டில் உள்ள இளைஞர்கள் மீது போலீசார் தொடர் பொய் வழக்குகள் போடுவதாகவும், விசாரணைக்கு அழைத்து செல்லப்படும் இளைஞர்களை போலீசார் கடுமையாக தாக்குவதாகவும், இதை கண்டித்தும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும் பாெதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர். வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வல்லநாடு பகுதியில் பரபரப்பு நிலவியது.

Similar News