மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: பரபரப்பு

தூத்துக்குடி அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் சட்டமன்ற கூட்டத் தொடரில் தொழில் வாரியான நல வாரியங்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் மற்றும் கொள்கை வகுக்க்க கோரி அமைப்புசாரா தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை;

Update: 2025-10-13 13:00 GMT
தூத்துக்குடியில் அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் நாளை நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நல வாரியங்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் மற்றும் சிறப்பு கொள்கை வளர்க்க வேண்டும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உப்பள தொழிலாளர் நல வாரியம் துவங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக செயல்படாமல் இருப்பதை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் தொழிலாளர் துறை மற்றும் இதர துறைகளில் இயங்கும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நல வாரியங்களுக்கும் ஜிஎஸ்டியில் ஒரு சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் மத்திய மாநில அரசுகளின் பட்ஜெட்டில் மூன்று சதவீதம் அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும் வீடற்ற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தொழிலாளர் நல வாரியங்களை பாதிக்கக்கூடிய மத்திய அரசின் தொகுப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட இருபது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு மாநில துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகள் அடங்கிய பதாகையுடன் கண்டன கோஷங்களை எழுப்பினர் இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது

Similar News