பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் குடும்ப அட்டை திருத்த முகாம்.
பரமத்தி வேலூர் வட்ட வழங்கள் அலுவலகத்தில் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் குடும்ப அட்டை திருத்த முகாம்.;
பரமத்திவேலூர், அக்.12: பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீர் குடும்ப அட்டை திருத்த முகாம் நடைபெற்றது. பரமத்தி வேலூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர் சித்ரா தலைமையில் தனி வருவாய் ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள் கொண்ட குழுவினர் மூலம் குடும்ப அட்டை திருத்த முகாம் நடைபெற்றது. முகாமில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பரமத்தி வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட 56 வருவாய் கிராமங்களை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், முகவரி திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் கை பேசி எண் மாற்றம் குறித்தும் மனுக்கள் கொடுத்து தீர்வு கண்டனர். அதேபோல் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகளின் குறைகள் குறித்தும் வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்தனர். இதில் புகளூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெற்றனர்.