கரூர் -சுங்க கட்டணம் இல்லாமல் தீபாவளி கடைகள் நடத்திக் கொள்ளலாம். கரூர் மாநகராட்சியில் அவசர தீர்மானம்.
கரூர் -சுங்க கட்டணம் இல்லாமல் தீபாவளி கடைகள் நடத்திக் கொள்ளலாம். கரூர் மாநகராட்சியில் அவசர தீர்மானம்.;
கரூர் -சுங்க கட்டணம் இல்லாமல் தீபாவளி கடைகள் நடத்திக் கொள்ளலாம். கரூர் மாநகராட்சியில் அவசர தீர்மானம். கரூர் மாநகராட்சி ஆணையர் சுதா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஜவகர் பஜார் பகுதியைத் தவிர பிற பகுதிகளில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறு குறு வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படா வண்ணம் சுங்க கட்டணம் இல்லாமல் தற்காலிக தரைக்கடைகள் அமைக்க மாமன்ற அவசரக் கூட்ட தீர்மானம் 2743 இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே தீபாவளி பண்டிகையின் போது அமைக்கப்படும் தற்காலிக தரைக்கடைகளை சிறு குறு வியாபாரிகள் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படா வண்ணம் தகுந்த பாதுகாப்புடன் தீயணைப்பு மற்றும் பிற துறைகள் அனுமதியோடு கடைகளை நடத்திக் கொள்ளலாம் என அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.