மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

தூத்துக்குடியில் பல சரக்கு கடையில் மாநகராட்சி அதிகாரிகள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை வியாபாரம் செய்யும் நேரத்தில் அதிகாரிகள் சோதனைக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு;

Update: 2025-10-13 15:13 GMT
தூத்துக்குடி மாநகராட்சி நகர் நல அலுவலர் சரோஜா தலைமையில் இன்று மாலை தூத்துக்குடி மாநகரில் கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள டீ கடைகள் மற்றும் பல சரக்கு கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து சோதனை செய்தனர் அப்போது சில கடைகளில் விற்பனை செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை மற்றும் சிகரெட் உள்ளிட்ட பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் இந்நிலையில் தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் தனியார் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம் அருகே அமைந்துள்ள ஒரு பலசரக்கு கடையில் மாநகராட்சி நகர் அலுவலர் சரோஜா தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட முயன்றனர் அப்போது கடை உரிமையாளர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் இதை தொடர்ந்து கடை உரிமையாளர் வியாபாரிகள் சங்க தலைவர் ஜவகர் உள்ளிட்ட வியாபாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து அங்கு கூடிய வியாபாரிகள் வியாபாரம் நடைபெறும் நேரத்தில் அதிகாரிகள் இவ்வாறு சோதனை என்ற பெயரில் அத்துமீறி உள்ளே நுழைந்து சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது இதைத்தொடர்ந்து சோதனையை நிறைவு செய்யாமல் அந்த பகுதியில் இருந்து மாநகராட்சி அதிகாரிகள் திரும்பி சென்றதைத் தொடர்ந்து வியாபாரிகள் கலைந்து சென்றனர்

Similar News