குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு பிரிவில் திரைகள் அமைத்தல் மற்றும் உடன் இருப்பவர்களுக்கான இருக்கை வசதி மற்றும் பொருட்கள் பாதுகாப்பிற்கான வசதி ஏற்படுத்துதல் போன்ற 18 அறைகள் கொண்ட புதிய கட்டிட திறப்பு விழா நடந்தது இதற்கு பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் விஜய் வசந்த் எம் பி ரூபாய் 10 லட்சம் ஒதுக்கீடு செய்தார். மாவட்ட கலெக்டர் அழகு மீனா ஏடி மைன்ஸ் நிதியிலிருந்து 35 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து புதிய ஸ்கேன் மிஷன் இரண்டு சி டி ஜி மிஷன் பொருத்தப்பட்டது. விஜய் வசந்த் எம் பி இந்தக் கட்டிடத்தை திறந்து வைத்து ஸ்கேன் மெஷின் துவக்கி வைத்தார். அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் டாக்டர் பினா முன்னிலை வகித்தார். விளவங்கோடு கிராம பஞ். முன்னாள் தலைவர் லைலா ரவிசங்கர், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திவாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.