கரூர்- கள்ளசாராயம் காய்ச்சிய நபர்கள்- கள்ளச்சாராயக்காரர் தடுப்புச் சட்டத்தில் கைது

கரூர்- கள்ளசாராயம் காய்ச்சிய நபர்கள்- கள்ளச்சாராயக்காரர் தடுப்புச் சட்டத்தில் கைது;

Update: 2025-10-14 12:32 GMT
கரூர்- கள்ளசாராயம் காய்ச்சிய நபர்கள்- கள்ளச்சாராயக்காரர் தடுப்புச் சட்டத்தில் கைது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா நாகம்பள்ளி ஊராட்சியில் உள்ள மூலப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் கதிரேசன் வயது 32. இதே போல சின்னதாராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முடிக்கணம் அருகே அணைப்பாளையம் அம்மன் நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி வயது 67. இவர்கள் இருவர் மீதும் செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் சாராயம் காய்ச்சியதாக கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் மேற்கொண்ட விசாரணையின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா மாவட்ட ஆட்சியர் தங்கவேலுக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அளித்த உத்தரவுபடி நேற்று திங்கள் கிழமை இருவர் மீதும் கள்ள சாராயக்காரர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News