கரூர் - சுயசார்பு பாரதம் சங்கல்பம் நாளாக கொண்டாடிய பாஜகவினர்.
கரூர் - சுயசார்பு பாரதம் சங்கல்பம் நாளாக கொண்டாடிய பாஜகவினர்.;
கரூர் - சுயசார்பு பாரதம் சங்கல்பம் நாளாக கொண்டாடிய பாஜகவினர். பாரதிய ஜனதா கட்சி இன்றைய தினம் நாடு முழுவதும் சுயசார்பு பாரதம் சங்கல்பம் நாளாக கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கரூர் மத்திய நகரம், வாக்கு சாவடி எண் 117 ல் கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் வீடு தோறும் சுதேசி எனது பெருமை, சுதேசி பொருள்களை பயன்படுத்துவோம் என உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த செந்தில்நாதனுக்கு அப்பகுதி கட்சி நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியின் பொறுப்பாளர், மாவட்ட துணை தலைவர் சக்திவேல் முருகன் முன்னிலை வைத்தார். மாவட்டச் செயலாளர்கள் முருகேசன், வெங்கடாசலம், கரூர் மத்திய மாநகரத் தலைவர் சரண்ராஜ் மற்றும் நகர, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்காக வழங்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கட்சியினர் கையொப்பம் செய்தனர். பிறகு உறுதிமொழி ஏற்ற பிறகு ஒவ்வொரு வீட்டு வாசல் கதவுகளிலும்,சுதேசி பொருட்களை பயன்படுத்துவோம் என்ற இலச்சியின் வில்லைகளை ஒட்டினர்.