டெக்ஸ் பார்க் அருகே டூவீலர்கள் மோதல், முதியவர் படுகாயம்.

டெக்ஸ் பார்க் அருகே டூவீலர்கள் மோதல், முதியவர் படுகாயம்.;

Update: 2025-10-14 13:32 GMT
டெக்ஸ் பார்க் அருகே டூவீலர்கள் மோதல், முதியவர் படுகாயம். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா பாகநத்தம் அருகே உள்ள மஞ்ச நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி வயது 65. இவர்சனிக்கிழமை அன்று காலை 9 மணி அளவில் திண்டுக்கல்- கரூர் சாலையில் அவரது டூவீலரில் டெக்ஸ் பார்க் பகுதியில் உள்ள கரூர் புரோட்டா ஹோட்டல் முன்பு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் கரூர் அரவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த மார்ட்டின் என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர் பழனிச்சாமி டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நிலை தடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்த பழனிச்சாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பழனிச்சாமி அளித்த புகாரின் பேரில் விபத்து ஏற்படும் வகையில் டூவீலரை ஓட்டிய மார்ட்டின் மீது அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News