காந்திகிராமம் அருகே டூ வீலர் டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து. சிறுமி படுகாயம்.

காந்திகிராமம் அருகே டூ வீலர் டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து. சிறுமி படுகாயம்.;

Update: 2025-10-14 13:47 GMT
காந்திகிராமம் அருகே டூ வீலர் டேங்கர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து. சிறுமி படுகாயம். கரூர் தெற்கு காந்திகிராமம் இந்திரா நகர் விஸ்தரிப்பு கே கே நகர் 2-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரேகா வயது 41.இவரது மகள் ஸ்ரீ தர்ஷினி வயது 17. இவர்கள் இருவரும் சனிக்கிழமை அன்று மதியம் 1:30 மணி அளவில் கரூர் - திருச்சி சாலையில் அவரது காரில் சென்றனர். காரை ரேகா ஓட்டி செல்ல ஸ்ரீதர்ஷினி காரில் அமர்ந்து சென்றார். இவர்களது கார் காந்திகிராமம் டபுள் டேங் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது கரூர் செல்லாண்டிபாளையம் மேற்கு தெருவை சேர்ந்த தட்சிணாமூர்த்தி வயது 71 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டேங்கர் லாரி ரேகா ஓட்டிச் சென்ற கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணித்த ஸ்ரீதர்ஷினிக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரேகா அளித்த புகாரில் டேங்கர் லாரியை அஜாக்கிரதையாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய தட்சிணாமூர்த்தி மீது தாந்தோணி மலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

Similar News