முள்ளங்கனாவிளையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

கருங்கல்;

Update: 2025-10-16 03:54 GMT
குமரி மாவட்டம் கருங்கல் பிரிவு நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் முள்ளங்கனாவிளை ஊராட்சிக்குட்பட்ட பப்புரான் குளம் உள்ளது. இந்த குளத்தையொட்டி கருங்கல் -மார்த்தாண்டம் பிரதான சாலை உள்ளது. இ்ந்த குளத்திற்கு செல்லும் நீரோடையின் மேல் பகுதி மற்றும் அதன் அருகில் உள்ள நீர்வளத்துறைக்கு சொந்தமான இடத்திலும் தனிநபர் ஒருவர் திடீரென ஞாயிற்றுக்கிழமை கடை அமைத்துள்ளார். இதனால்,பெருமழைகாலங்களில் குளத்திற்கு மழை நீர் செல்லமுடியாத நிலை உள்ளது. எனவே,அப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடையை உடனே,அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Similar News