வெண்கல பதக்கம் பெற்ற திண்டுக்கல் மாணவனுக்கு பாராட்டு விழா

முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற திண்டுக்கல் மாணவனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது;

Update: 2025-10-16 04:30 GMT
சென்னையில் கலைஞர் குத்துச்சண்டை மைதானத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி, கடந்த 9ம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டம் சார்பில் கலந்து கொண்ட பி.எஸ்.என்.ஏ., கல்லூரி மாணவர் பிரஜித் ஐயப்பன், கல்லூரி மாணவர்களுக்கான பிரிவில் வெண்கலம் பதக்கம் வென்று சாதனை படைத்தார். வெற்றி பெற்ற அவருக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் ரொக்க தொகை ரூ.25000 பரிசு வழங்கப்பட்டது. இவருக்கு நேற்று திண்டுக்கல் குத்துச்சண்டை சங்கம் சார்பில் ஆறுமுகம் பாக்சிங் வேர்ல்ட் பயிற்சி மையத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட குத்துச்சண்டை சங்கம் செயலாளர் ராஜகோபால் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மாதவன், ஆறுமுகம் பாக்சிங் வேர்ல்ட் தலைவர் ராஜன், பயிற்சியாளர் ஆறுமுகம் காசி ராஜன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திண்டுக்கல் மேற்கு போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ. காதர் மைதீன், வழக்கறிஞர் பொன்னி.P.அங்குசாமி வெற்றி பெற்ற வீரருக்கு பொன்னாடை அளித்து பரிசு வழங்கி பாராட்டினர்.

Similar News