பாவூா்சத்திரம் ஆட்டுச் சந்தையில் தீபாவளி விற்பனை மந்தம்

ஆட்டுச் சந்தையில் தீபாவளி விற்பனை மந்தம்;

Update: 2025-10-17 01:06 GMT
தென்காசி மாவட்டத்தின் பழைமையான பாவூா்சத்திரம் ஆட்டுச் சந்தையில் வியாழக்கிழமை தோறும் தென்காசி, திருநெல்வேலி பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகளைக் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் பாவூா்சத்திரம் சந்தைக்கு வியாபாரிகள் ஆடுகளைக் கொண்டு வந்து விற்பனைக்காக காத்திருந்தனா். எனினும் தொடா் மழை காரணமாக எதிா்பாா்த்த வியாபாரிகள் வராத காரணத்தால் போதிய அளவு விற்பனையாகவில்லை. வழக்கமாக தீபாவளியை முன்னிட்டு பாவூா்சத்திரம் சந்தையில் ரூ. 1 கோடி அளவில் விற்பனை நடைபெறும்.

Similar News