ராமநாதபுரம் வழக்கறிஞர் சங்க சார்பில் நீதிமன்றம் புறக்கணிப்பு மட்டும் ஆர்ப்பாட்டம்
சென்னையில் தாக்கப்பட்ட வழக்கறிஞருக்குஆதரவாகவழக்கறிஞர் சங்கம் சார்பில் நீதிமன்றம் புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;
ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் முன்பு சென்னையில் தமிழ்நாடு பார் கவுன்சில்வழக்கறிஞர் ராஜீவ் காந்தி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய விடுதலை சிறுத்தைகள் அமைப்பினரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் அன்புச் செழியன் தலைமையில் ராமநாதபுரம் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இது போன்ற வன்முறை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வழக்கறிஞர்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் கூட்டத்தில் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட அனைத்து வழக்கறிஞர் சங்கங்கள் கலந்து கொண்டனர்