விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை

தூத்துக்குடி வானிலை மைய எச்சரிக்கையை தொடர்ந்து இரண்டாவது நாளாக தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் 270க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்திவைப்பு மீனவர்கள் வாழ்வாதாரம் இழப்பு;

Update: 2025-10-17 09:38 GMT
தூத்துக்குடி வானிலை மைய எச்சரிக்கையை தொடர்ந்து இரண்டாவது நாளாக தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் 270க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்திவைப்பு மீனவர்கள் வாழ்வாதாரம் இழப்பு தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று 17ஆம் தேதி வரை ஆரஞ்சுஅலார்ட் விடுக்கப்பட்டு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது மேலும் கடல் பகுதியில் பலத்த காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் ஆழ் கடலுக்கு செல்லும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர் இதைத்தொடர்ந்து தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை இதன் காரணமாக விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 270 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன இதேபோன்று தருவை குளம் வேம்பார் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆழ்கடலுக்கு சென்று திரும்பிய விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன மேலும் ஏற்கனவே ஆழ் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் பத்திரமாக மீன் பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் சுமார் 10,000 மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்

Similar News