வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆட்சியர் நேரில் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக வெள்ளத் தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. இளம்பகவத், இ.ஆ.ப. அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.;
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் இன்று (17.10.2025) வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக வெள்ளத் தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. இளம்பகவத், இ.ஆ.ப. அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில், அவர் கீழக்கால் கால்வாய் முடிவு தடுப்பணை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து, நீரோட்டம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பரிசீலித்தார். மேலும், மழைக் காலத்தில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான பணிகளை விரைவாக நிறைவு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு. தி. புவனேஷ் ராம், இ.ஆ.ப., செயற்பொறியாளர் (கீழ்தாமிரபரணி & கோரம்பள்ளம் வடி நிலக் கோட்டம்) திரு. தங்கராஜ், உதவி செயற்பொறியாளர் (திருவைகுண்டம்) திரு. சிவராஜன், உதவி பொறியாளர் (கிழக்கால் பிரிவு) திரு. அஜ்மீர் கான் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலரும் உடன் இருந்தனர்.