அயலகத் தமிழர் நல வாரியத்தில் பதிவு அவசியம் – ஆட்சியர் அறிவிப்பு

அயலகத் தமிழர் நல வாரியத்தில் பதிவு அவசியம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு;

Update: 2025-10-18 05:33 GMT
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்ததாவது: வேலை, கல்வி, வணிகம் உள்ளிட்ட காரணங்களுக்காக அயல்நாடுகளுக்கு அல்லது இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு செல்லும் தமிழர்கள் அயலகத் தமிழர் நல வாரியத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அயலகத் தமிழர் நல வாரியம் 24.12.2022 முதல் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் விபத்து, நோய்கள், கல்வி, திருமண உதவித்தொகை, மருத்துவ உதவி, திறன் மேம்பாட்டு திட்டம் போன்ற பல நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்டவர்களுக்கு அயலகத் தமிழர் அடையாள அட்டை வழங்கப்படும். இதன் மூலம் தற்போதைய மற்றும் எதிர்கால நலத்திட்டங்களிலும் பயன் பெறலாம். வெளிநாடு செல்ல விரும்பும் தமிழர்கள் அருகிலுள்ள முன்பயண பயிற்சி மையங்களில் பயிற்சி பெறவும், பதிவு செய்ய https://nrtamils.tn.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News