பைக் விபத்தில் விபத்தில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக பலி
தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் விபத்தில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.;
தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் விபத்தில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை ஜி.எச். தெருவை சேர்ந்தவர் காசி (42). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் இருந்து மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடிக்கு வந்து கொண்டு இருந்தாராம். இவர் செர்வைட் பள்ளிக்கூடத்துக்கு எதிரே வந்த போது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தாராம். இதில் பலத்த காயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.