பொட்டல்புதூரில் பரிதாபம் ராமநதி ஆற்றில் மூழ்கி கேரள வாலிபர் பலி
ராமநதி ஆற்றில் மூழ்கி கேரள வாலிபர் பலி;
தென்காசி மாவட்டம் கடையம் அருகே பொட் டல்புதூரில் பிரசித்தி பெற்ற முகைதீன் ஆண்ட வர் பள்ளிவாசல் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம் வெளி மாநிலத்திலிருந்தும் தின மும் ஏராளமான இஸ்லா மியர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த அப்துல் ஜாபர் மகன் மாகின்(44) என்பவர் வேண்டுதலுக் காக தனது தாயாருடன் தர்கா அருகேயுள்ள குடியி ருப்பில் கடந்த 2 மாதங்கனாக தங்கி வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் பள்ளிவாசல் அருகில் செல்லும் ராம நதி ஆற்றிற்கு குளிக்க சென்றார். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்றதால் அவர் ஆற்றில் மூழ்கினார். இதையடுத்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரணை.