குளச்சல் துறைமுக தெருவை சேர்ந்தவர் டேவிட் குமார் (43) மாற்றுத்திறனாளி. இவர் அந்த பகுதியில் நிலம், வீடு வாங்கினார். இது சம்பந்தமாக அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் இரணியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு தள்ளுபடி ஆகி, தற்போது டேவிட் குமார் அந்த வீட்டில் குடியேறி பராமரிப்பதற்கு பராமரிப்பு பணிகளை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6ம் தேதி மர்ம நபர்கள் அந்த வீட்டை ஜேசிபி எந்திரம் மூலம் இடித்தனர். டேவிட் குமார் குளச்சல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி, நேற்று அதே பகுதியை சேர்ந்த ஹரிதாஸ் அவரது மனைவி சிந்து ஆகியவர் மீது வீட்டை இடித்து சேதப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்தனர்.