பெண் வக்கீல் மீது வழக்கு பதிவு

களியக்காவிளை;

Update: 2025-10-18 08:50 GMT
குழித்துறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநாடு நடந்தது. இதற்காக பொது இடத்தில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. பல நாட்களாகியும் அந்த மேடை அகற்றப்படாமல் போக்குவரத்து இடையூறாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. களியக்காவிளை போலீசார் மேடை அமைத்த பெண் வக்கீல் ஜூலியட் மெர்லின் ரூத் (47) என்பவரிடம் மேடையை அகற்றுமாறு கூறினர். ஆனால் மேடை அகற்றாததால்  களியக்காவிளை போலீசார் பெண் வக்கீலான ஜூலியட் மெர்லின் ரூத் மீது இன்று வழக்கு பதிவு செய்தனர்.

Similar News