மின்வாரியம் சார்பில் சூரிய வீடு மின் திட்ட கண்காட்சி.

பரமத்தி வேலூரில் மின்வாரியம் சார்பில் சூரிய வீடு மின் திட்ட கண்காட்சி நடைபெற்றது;

Update: 2025-10-18 14:28 GMT
பரமத்தி வேலூர், அக். 17: பரமத்தி வேலூரில் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், நாமக்கல் மின் பகிர்மான வட்டம் மற்றும் பிரதம ரின் சூரிய வீடு மின் திட்டம் சார்பில் சோலார் பேனல் அமைப்பது குறித்த முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இம்முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் தொடங்கி வைத்தார். பரமத்தி வேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வர தராஜன் விழாவில் கலந்துகொண்டு, பிரதம மந்திரியின் சூரிய வீடு மின் திட்டம் குறித்து மின் நுகர்வோர்களுக்கு எடுத்துக் கூறினார். இந்நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், மின்நுகர் வோர் பரமத்தி வேலூர் கோட்டத்துக்கு உள்பட்ட வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், ஜேடர்பாளையம், சோழசி ராமணி, கபிலர்மலை, பரமத்தி, கீரம்பூர், பாலப்பட்டி, மோக னூர், அணியாபுரம், சித்தாளந்தூர், நடந்தை, கந்தம்பாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், இந்த முகாமில் சோலார் விற்பனையாளர்கள், வங் கிக் கடன் வழங்குவதற்காக வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டு சோலார் பயன்பாட்டால் மின்உற்பத்தி மற்றும் மின் உபயோகக் கட்டணத்தை குறைப்பது குறித்து விளக்கிக் கூறினர். கபிலர்மலை உதவி செயற்பொறியாளர் ராஜா நன்றி கூறினார்.

Similar News