ஊத்தங்கரையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.
ஊத்தங்கரையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது இந்த நிலையில் நேற்று வளாகத்திற்குள் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறையை அழைக்கும் அவசர உதவி எண் 100 என்ற எண்ணிற்கு மர்ம நபர் அழைத்து வெடிகுண்டு இருப்பதாக தகவல் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஊத்தங்கரை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் கிருஷ்ணகிரி உள்ள மோப்பநாய் ரோசியை வரவழைத்தனர். பள்ளி முழுவதும் 1 மணிநேரம் தேடியும் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.