ஓசூர் அருகே டூவீலர் கவிழ்ந்து விபத்து தொழிலாளி உயிரிழப்பு.
ஓசூர் அருகே டூவீலர் கவிழ்ந்து விபத்து தொழிலாளி உயிரிழப்பு.;
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் பாப்பண்ணா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (55) இவர் துணி சலவை செய்யும் கடை வைத்துள்ளார் இந்த நிலையில் கடந்த 16-ஆம் தேதி அன்று அவர் டூவீலரில் ராயக்கோட்டை சாலையில் உள்ள பைரமங்கலம் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக டூவீலர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த சம்பத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி சம்பத் உயிரிழந்தார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.