நாமக்கல் ஸ்ரீ கோகுல்நாதா மிஷன் கேட்டரிங் கல்லூரி சார்பில் "உலக உணவு நாள்" நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
உலக உணவு நாள் 2025-இன் மைய பொருளாக "சிறந்த உணவுகள் மற்றும் எதிர்காலத்துக்காக கைகோர்த்து செல்லுங்கள்" என்பதை மையமாக வைத்து கேட்டரிங் துறையில் பயிலும் மாணவ மாணவிகள் அனைவரும் உணவுகளை சிறப்பான முறையில் தயார் செய்து வந்தனர்.;
நாமக்கல் மாவட்டம் இராமாபுரம் புதூரில் உள்ள ஸ்ரீ கோகுல்நாதா மிஷன் கேட்டரிங் கல்லூரியில் உலக உணவு நாள் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஸ்ரீ கோகுல்நாதா மிஷன் கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மாதையன் முன்னிலை வகித்து துவக்கி வைத்தார்.உலக உணவு நாள் 2025-இன் மைய பொருளாக "சிறந்த உணவுகள் மற்றும் எதிர்காலத்துக்காக கைகோர்த்து செல்லுங்கள்" என்பதை மையமாக வைத்து கேட்டரிங் துறையில் பயிலும் மாணவ மாணவிகள் அனைவரும் உணவுகளை சிறப்பான முறையில் தயார் செய்து வந்தனர். மேலும் கேட்டரிங் கல்லூரி மாணவ/மாணவிகள் இந்திய உணவு வகை, ஐரோப்பிய உணவு வகை, மேற்கத்திய உணவு வகை போன்ற பல்வேறு நாட்டின் கலாச்சார உணவுகளை செய்தனர். இதில் கல்லூரியின் முதல்வர், ஆசிரியர்கள்,மாணவ/ மாணவிகள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து இந்நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.